குடைமிளகாய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!!
சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் விற்கும் குடைமிளகாயை ஒரு சிலர் மட்டுமே வாங்கி சமையலுக்கு பயன் படுத்துகின்றனர். பலருக்கும் தெரியாத இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
கண் ஆரோக்கியம் :
குடைமிளகாயில் காரோட்டினாயிடுகள் இருப்பதால், கண்களை என்றும் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவும். கண்பார்வை மங்களாக இருப்பவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் :
ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் குடைமிளகாயில் அதிகம் இருப்பதால் உடல் ஆக்ஸிடேட்டிவ் ஆகாமல் தடுக்கிறது. உடலிற்கு மட்டுமின்றி இதில் இருக்கும் UVA மற்றும் UVB கதிர்கள் சருமத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
குடைமிளகாயில் வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் சி சக்தி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நோய் தொற்றில் இருந்தும் பாதுகாக்கும்.
கேன்சர் :
குடைமிளகாயில் Apigenin, lupeol, luteolin, Quercetin மற்றும் capsiate போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் இருப்பதால், புற்றுநோய் அபாயத்தில் இருந்து உடலை பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியம் :
குடைமிளகாயில் லைகோபீன், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. குடைமிளகாயில் இருக்கும் வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் லெவலை குறைக்க உதவும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..