பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியது. பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஆன்லைன் நிதி மோசடியால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று முதல் டிசம்பர் மாதம் 29 தேதி வரையிலான பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் விலைவாசி பணவீக்கம் குறித்தும் ஆளுங்கட்சி சார்பில் நாட்டின் நலன் குறித்தான பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 2021 ஜனவரி முதல் 2022 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இதுவரை 8.84 லட்சம் ஆன்லைன் நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக 2021ம் ஆண்டில் இதுவரை 3503 மோசடியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் யூபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.