இளநீரில் இவ்வளவு பயன்களா..?
கோடைகாலம் மற்றும் குளிர்காலம் என அனைத்து சீசன் களிலும் கிடைக்க கூடிய மற்றும் உடலுக்கு ஏற்ற ஒரு உணவு பொருள்.., இளநீர்.
வெயில் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும்.., ஒரு இளநீர் ஜூஸ் அடித்தால் போதும்.., வயிறு சமந்தமான பிரச்சனைகளை இளநீர் விரட்டி அடித்து விடும்..
ஆனால் அதனின் நன்மை பற்றி பலரும் தெரிந்துக் கொள்வதில்லை.. இளநீர் பயன்கள் பற்றி இன்று பார்க்கலாம்.
* இளநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட் மற்றும் தாது உப்புகள் இருப்பதால்.., நீரிழப்பு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
* வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றில் இருந்து காக்கவும் உதவுகிறது.
* வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு போன்றவற்றை சரி செய்யவும் உதவுகிறது.
* இளநீரில் உள்ள தேங்காய் வயிற்று புண்களை ஆற்றும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக இளநீர் எடுத்துக்கொள்ளக் கூடாது.
* சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் இளநீரை தவிப்பது நல்லது.
* இளநீரை வெட்டிய உடனே குடித்து விட வேண்டும்.., நீண்ட நேரம் கழித்தோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்தோ குடிப்பது நல்லதல்ல.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.