நீங்க ஒரு காபி பிரியரா..? அப்போ இதை படிங்க முதல..!!
உலகளவில் மிகவும் பிரபலமான, விருப்பமான பானமாக இருந்து வருவது ‘காபி’.
சிலருக்கு நாள் தொடங்குவதே இந்த காபியில் தான். உடலுக்கு சுறுசுறுப்பு தரும் இந்த காபியில் பல நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு மீறினால் பல பின்விளைவுகளை தரக்கூடியது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 4 கப் காபி மட்டும் தான் குடிக்கணுமாம்.
அதற்கு மேல் குடித்தால் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் அதிகப்படியான காபி நம் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும், மேலும் சரும பிரச்சனைகள் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் அதிகப்படியான காபி குடிப்பதால் வரும் சரும பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
அதிகப்படியான காபி குடிப்பதால் வரும் சரும பிரச்சனைகள் :
உங்களின் சருமம் டீஹைட்ரேட் ஆகி சருமம் வறண்டு காணப்படும். அதேபோல் உங்களின் தோற்றத்தை அதிக வயதுடையவரை போன்று காண்பிக்கும்.
நாள் ஒன்றுக்கு அதிகமாக காபி குடித்து வந்தால், அது உங்களின் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அதிகப்படுத்தி சருமத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்திவிடும். இதனால் உங்கள் முகம் எண்ணெய் வடிந்தது போல் காட்சியளிக்கும்.
அதிகப்படியான காபி குடிப்பதால், இது உங்களின் இரவு தூக்கத்தை கெடுக்கும். உங்கள் உடலுக்கு சரியான தூக்கம் கிடைக்காததால் சருமத்தின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.
சரியான முறையில் காபி குடிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
தினமும் 2 கப் காபி குடிப்பது நல்லது. அதுவும் மாலை 4 மணிக்கு முன்னரே குடிப்பது மிகவும் நல்லது.
இரவில் தவிர்த்திடுங்கள்.
பால் கலக்காத பிளாக் காபியை எப்போதும் பயன்படுத்துங்கள்..
காபியில் சக்கரையை தவிர்த்தால் அதன் முழு பயனும் அப்படியே கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு வெறும் 2 கப் காபி மட்டும் குடித்து வந்தால் உங்களின் சருமம் பளபளவென ஜொலிக்கும், செம எனர்ஜியாகவும் உணர முடியும்னு சொல்லபடுது.
ஆகவே காபியை அளவாக எடுத்துக்கொண்டு அதன் ருசியையும், ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவியுங்கள்
இந்த பதிவு உபயோகமா இருந்தா ஷேர் செய்யுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..