இசைமழையில் நனைய தயாரா..? இவரோட மியூசிக்ல அப்படி என்ன இருக்கு..?
ஒரு இசை என்பது எப்படி மனதிற்கு பல விதமான உணர்வுகளை நமக்கு தருகிறது. அதுபோல இசையமைப்பாளர்களின் முக்கிய பங்கினை அந்த இசையின் வாயிலாக காண முடியும். பலரும் இவருடைய இசைக்கு அடிமை என்று தான் சொல்ல வேண்டும்.
காதலாக இருந்தாலும் சரி காதல் தோல்வியாக இருந்தாலும் சரி அவங்களுக்கு ஒரு மருந்தாக இருக்கக்கூடிய பாடல்களை தருவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இசைகளுக்கு ஒரு தலைவனாக விளங்க கூடியவர் இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா”.
இசைமழையில் நனைய தயாரா இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல், பின்னணி பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ் திரைப்படத்தில் “ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவர் என்ற பெருமையும் இவரையையே சேரும். சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இசையமைப்பாளர் இவரே ஆகும்.
எத்தனையோ பஸ் பயண பாடல்கள் இருந்தாலு இந்த பாடல்மட்டும் தனி பீலிங் என்றுதான் சொல்லவேண்டும்,உன் முகத்தை எப்படி மூடி வைத்திருந்தாலும் உன் நெற்றியில் இருக்கும் போட்டு அதை காண்பித்து விடுகிறது உன் காலியில் அணிந்திருக்கும் கொலுசும் உன் கையில் மாட்டிருக்கும் வளையலும் போதும் உன்னை பற்றி அறிய இந்த பாடலுக்கு இசையமைத்தவர் “யுவன் சங்கர் ராஜா” பாடலை பாடியவர்கள் ஹரிச்சரண்.
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே………
இந்த படத்தில் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் அதில் இன்னும் சுவை கூட்டும் வகையில் இருக்கும் பிஜியம், எல்லாரையும் கொன்று விட்டது. என்று தான் சொல்லணும் கோவிலில் தெரியாமல் ஹீரோணியின் நெற்றில் குங்குமத்தை வைத்து விடும் ஹீரோ அந்த பிஜியம், சொல்லும் போதே கன்முன் தோன்றுகிறது.
அந்த காட்சிகள். ஏய் லூசு பொன்னே உனக்கு என்மேல காதல் வராத பெண்னே காலையில் இருந்து மாலை வரைக்கும் உன்னைத்தான் நினைக்க தோன்றுது, இரவு தூங்கவிடாமல் உன்னையே நினைக்க தோணுகிறது இந்த பாடலை இசையமைபாளர் “யுவன் ஷங்கர் ராஜா” இசையமைத்திருக்கிறார். பாடகர்கள் சிலம்பரசன், பிளாஸி சேர்ந்து பாடி இருப்பார் .
லூசு பெண்ணே
லூசு பெண்ணே லூசு
பெண்ணே லூசு பையன்
உன்மேல தான் லூசா
சுத்துறான்……
கிராமத்து பேச்சில் நீ பேசும்பொழுது உன் கண்ணால வெட்டி என்னை தூக்கிற சூறாவளி காத்து வீசுறது போல புழுதி பறக்கும்படியாக் தாக்குற உன் தாவணி காத்தில் நான் மூச்சி விடுற நீ பேசுற பேச்சு எல்லாம் சக்கரையாக மறுதே, இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டும் பாடகர் யுவன் சங்கர் ராஜா இவர் ஒருவரே.
கம்பத்து பொண்ணு
கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூராளி போல
புழுதி பறக்க தாக்குற..
வானம் என்பது தலைக்கு மேலயே இருக்கும் என்று நினைத்தேன், எந்தன் வானம் கண்முன் வந்து சிரித்ததினால் நான் மெய்மறந்தேன், ஆசை எல்லாம் பூட்டி வைத்தேன் அதற்கான சாவி உன் விழிகளில் நான் பார்த்தேன், இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா” இசையில் பாடகர்கள் பென்னி டயல்,ஸ்வேதா பண்டிட் சேர்ந்து பாடிய பாடல் இது.
வானம் என்றால்
தலைக்கு மேலே இருக்கும்
என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்……..
இவர் பயணம் இதுமட்டும் இல்லை இன்னும் எக்கச்சக்கமான இசையில் நனைய வைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,இவர் இசைத்த பாடலில் உங்கள் விருப்பமான பாடல்கள் எது..?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..