தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம்..!! கெத்து காட்ட நினைத்த பாஜக..!!
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறு உள்ளது. தேர்தலில் பணம் புழக்கம், பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் மூலம் ஓட்டை வாங்க சில கட்சிகள் முயற்சிப்பதால் அதனை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
50,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமோ அல்லது நகையோ உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் உடனே அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் அலுவலகர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளை மேற்பவர்கள் மீது தேர்தல் பறக்கும் படையினர் கடும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் காவல்துறையினருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரை சோதனை மேற்கொண்டபோது, சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை ஏ.பி. முருகானந்தம் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஏ.பி.முருகானந்தம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல மக்களையே மதிப்பதில்லை என்றும், இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும் என எச்சரித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..