காங்கிரசின் கோட்டையாக இருந்த தமிழ்நாட்டின் சமூக அரசியல் போக்கினை மாற்றிய தமிழ்த்தாயின் தலைமகன் – சி என் அண்ணாதுரையின் 115வது பிறந்த தினம் இன்று
மேட்டுக்குடியின் ஆதிக்கத்துள்ளான மதராஸ் சட்டப்பேரவை அண்ணாவின் அரசியலால் குப்பனுக்கும் சுப்பனுக்கும் பிரதிநிதித்துவத்தை வழங்கியது.
அந்தக்காலத்தில் மாணவர்களிடையே திமுக செல்வாக்கு பெற்றிருந்தது மாணவர்களிடையே அறிவு புரட்சியை ஏற்படுத்தியதில் அண்ணாவின் பங்கு தவிர்க்க முடியதாதது. மார்டின் லூதர் கிங், ஹோசிமின், வியட்நாம் யுத்தம், சோவியத் ஒன்றியம், மாசேதுங் என உலக வரலாற்றை மாற்றியமைத்தவற்றையெல்லாம் அண்ணா தனது திராவிடநாட்டில் எழுதினார்.
இவையெல்லாம் அனறைய சமகாலத்திய நிகழ்வுகள் அண்ணா தனது வாசகர்களை அரசியல் படுத்தி அப்டேட்டடாக வைத்திருந்தார். மாணவர்கள் கல்லூரிகளுக்கு திராவிட நாடு, முரசொலி போன்ற திமுக தலைவர்களின் பத்திரிக்கைகளை எடுத்து செல்லும் அளவுக்கு திமுகவின் தாக்கம் இருந்தது.
மதராஸ் மாகாணத்திற்கு தமிழநாடு என்ற பெயர் மாற்றிய தமிழ் உணர்வு தமிழ்-ஆங்கிலம் உள்ளடக்கிய இருமொழிக் கொள்கை உருவாக்கி இந்தி எதிர்ப்புணர்வு, பார்ப்பானயிமற்ற சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமாக்கிய தன்மான உணர்வு, அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை நீக்கிய நாத்திகம், கம்பரசம், தீ பரவட்டும், நீதிதேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஷ்டிரம், ஆரிய மாயை என்ற நூல்கள் மூலம் இதுவரை நம்பிக்கெண்டிருந்த பழமை லோகங்களை உடைத்தெரிந்த பகுத்தறிவு இவையெல்லாம் தான் அண்ணா.
ஆரிய மாயை நூலுக்காக அண்ணாவை அன்றைய காங்கிரஸ் அரசு சிறையில் அடைத்தது அந்தளவுக்கு பூணூல்களை தாக்கியது அந்நூல். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தாலும் தட்சிணப் பிரதேச எதிர்ப்பு போராட்டத்தாலும் மதராஸ் மாகணத்தை நிலைதடுமாறச்செய்து நேருவை நிலைகுளையச்செய்தார்.
ஆரியத்தையும் சரி அந்த ஆரியத்தை அரவணைப்பவனாலும் சரி அண்ணா சமரசம் செய்து கொண்டதேயில்லை.
தமிழ்நாடு இன்றைக்கு பெற்றுள்ள தமிழ் உணர்வு, சுயமரியாதை தன்மை, வடவர் ஆதிக்க எதிர்ப்பு இவை எல்லாவற்றுக்கும் பேரறிஞர் அண்ணாவின் பங்கு தவிர்க்கமுடியாதது. அண்ணா போட்ட விதை தான் இன்று காட்டு மரங்களாய் தமிழகத்தில் வேரூன்றி நிற்கிறது. இனி யார் வந்தாலும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுமேயானால் தட்டிக்கேற்போம். அண்ணாவின் சிந்தனைக்கு நன்றிகள்….