தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பின்னர் நிகழ்வில் பேசிய முதல்வர் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டம் அரியலூர் என்று பேசினார்.
தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வரும் முக ஸ்டாலின் தற்போது அரியலூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் அதில், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் மேலும், 36,691பயனாளிகள் பயன்பெறும் 78 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகமும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய முதல்வர், எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டம் அரியலூர், இந்த அரசு தொல்லியல் துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார்.