ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..!! உண்மை குற்றாவிகள் கைது செய்யப்படவிலை..!! ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கேள்வி…!!
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த செப்டம்பர் 3ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அவரது கொலைக்கான நோக்கம் குறித்து அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.,
அதாவது அரசியலிலும், சமூகத்திலும் மக்கள் முன் நல்ல செல்வாக்காகவும் ஆட்கள் பலத்தோடும் இருந்ததால் அவரை வீழ்த்தி அந்த இடத்திற்கு வர இந்த கொலை நடந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அதாவது சென்னையின் அடுத்த பிரபல ரவுடி யார் என்றும்., சென்னையை ஆளப்போவது யார் என்ற போட்டி ரவுடிகளுக்குள் இருந்துள்ளது., ஆனால் அதற்கு ஆம்ஸ்ட்ராங் அனுமதிக்காததால் அவரை கொலை செய்து அந்த இடத்திற்கும் மற்றவர்கள் வர கூட்டு சேர்ந்து கொலை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய ரவுடிகள் கொலை :
பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனின் நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து., ரவுடி சம்பவ செந்திலின் காலனி வீடு விவகாரம் உட்பட ஆட்களை மிரட்டி பணம் வாங்குவது , ஆற்காடு சுரேஷ் மற்றும் தென்னரசு ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட இன்னும் 4 பேர் முன்விரோதங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
ரவுடிகளின் மோதல் விவகாரம் மட்டுமின்றி ஆருத்ரா பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டு கொடுத்தது மட்டுமின்றி., அதற்கு பின்னணியில் இருந்தவர்களை கைது செய்வதற்கான முயற்சியிலும் ஆம்ஸ்ட்ராங் ஈடுப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவியின் சபதத்தால் கூலிப்படை மற்றும் கூட்டாளிகளின் உதவியோடு ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாகவும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து கொலையை அரங்கேற்றி இருப்பதும், சிறையில் உள்ள நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி இருப்பதும், கொலையில் ஈடுபட்ட நபர்கள் பல்வேறு நட்சத்திர விடுதியிலும் கூட்டம் கூட்டி திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை செய்வதற்காக தொடர்ந்து 6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு., ஆம்ஸ்ட்ராங்கின் தினசரி நடவடிக்கை என்ன.? ஆம்ஸ்ட்ராங் எங்கு செல்கிறார்., அதிக நேரம் எங்கு செலவிடுகிறார் என நோட்ட மிட்டுள்ளனர்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேவையான அனைத்து பண உதவியை ரவுடி சம்பவ செந்தில் கொடுத்திருப்பதாகவும் மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் போடும் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தி இருப்பதையும் தெரிவித்துள்ளனர். கொலையை அரங்கேற்ற மொத்தம் 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தியதாலேயே கண்ணுக்கு தெரியாத மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் நடத்திய இந்த தீவிர விசாரணையில் ரவுடிகள் நாகேந்திரன், சம்பவ செந்தில் மற்றும் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 3 குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.. கைதான நபர்கள் மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் என 140 வங்கி கணக்குகளை சோதனை செய்து 73 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் ஒன்றரை கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 80 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்ற பத்திரிகையில் குற்றவாளிகளின் பெயர்கள்., கொலைக்கான காரணம் உட்பட 300க்கும் மேற்பட்ட சாட்சிகளின் பெயர்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 5ம் தேதி நடந்த கொடூர கொலைச் சம்பவத்திற்கு 90 நாட்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து தரப்பிலும் விசாரணை செய்து., கொலை செய்யப்பட்ட இடத்தில் புலனாய்வு செய்த பின்னரே காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்…
திருவள்ளூரில் இட பிரச்னையிலும் அஸ்வத்தாமனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை விட்டால் தனது மகன் வளர முடியாது என்று கருதிய நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைந்து 90 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி புத்தமத ரீதியாக அனுசரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
A1 மற்றும் A2 என ரவுடிகளை பிரித்தும் இதுவரையில் 17 பேரை மட்டும் காவலர்கள் கைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பொற்கொடி கேள்வி எழுப்பியுள்ளார்..
அதேபோல் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..