ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்துரில் அடக்கம்..! உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவு..!
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றைய முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரின் இந்த நிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கலையும் கண்டனங்களை தெரிவித்தனர்.
பின் அவரது உடலை பொத்துரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் மனு மீதான விசாரணை இன்று நடத்தப்பட்டது.
நீண்ட விவாதத்திற்கு பிறகு, ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், உடலை அமைதியான முறையில் அடக்கம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகஅரசு இதை உடனே செய்ய வேண்டும்..! ஆம்ஸ்ட்ராங் ஒரு போராளி..! தொண்டர்களுக்கு மாயாவதி..!
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..