கொலை மிரட்டல் விடும் அர்னாவ்..! உயிர் பயத்தில் நடிகை திவ்யா..!!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அர்னாவ் – திவ்யா வடநும்பால் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய திவ்யா அர்னவ் தன்னை சித்திரவதை செய்ததாக புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் அர்னாவ் கைதும் செய்யப்பட்டார். அதன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது திவ்யாவின் வீட்டிற்கு வழக்கறிஞ்சர்கள் மற்றும் பவுன்சர்களுடன் சென்ற அர்னாவ். திவ்யாவிடம் இந்த வீடு எனக்கு சொந்தமான வீடு என்று கூறி தகராறு செய்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் அர்னாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை அனுப்பிவைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவ்யா, அர்னவ்வால் என் உயிருக்கு ஆபத்து ஆபத்து இருக்கிறது. தொடர்ந்து அவர் பல கொலை மிரட்டல்கள் விடுவதாகவும், பத்திரிக்கையாளர்கள் முன் கண்ணீர் மல்க பேசினார்.
இந்த வீடு எனக்கு சொந்தமான வீடு, இதற்காக நான் 7லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி இருக்கிறேன். மீத பணத்தை தவணை ,முறையில் செலுத்திக்கொண்டு வருகிறேன். இது சம்மந்தமான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது, அதை நான் காவலர்களிடம் சமர்ப்பிக்க போகிறேன் எனவும், செய்தியாளர்கள் முன் திவ்யா கூறினார்.