பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு அற்புதம்மாள் வலியுறுத்தல்!

பேரறிவாளன் விடுதலை குறித்து வழக்கில் தமிழக அமைச்சரவையின் முடிவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளனின் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதை , தனது வாதத்தில் முன் வைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் பேரறிவாளனின் விடுதலையை தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

“கொரோனா வைரஸ் உயிரிழப்பு 902 ஆக அதிகரிப்பு; 5000-ஆக அதிகரிக்கலாம் என்றும் கணிப்பு”!!!

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்