விஷால் பெயரை கூறி 47 லட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரபல இயக்குனர் கைது!

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி 47 லட்ச ரூபாய் பண மோசடி செய்த இயக்குனர் வடிவுடையானை போலீசார் கைது செய்துள்ளனர்.

இயக்குனர் வடிவுடையான் இவர் நடிகர் கரணை வைத்து தம்பி வெட்டோத்தி சுந்தரம், பரத் நடித்த போட்டு, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான சௌகார்பேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் வடிவுடையான் மீது‌ சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் கோத்தாரி என்ற தயாரிப்பாளர், கடந்த ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், “2016 ஆம் ஆண்டு வடிவுடையான் தன்னிடம் நடிகர் விஷாலை நன்றாகத் தெரியும் என்றும், தனது கதையில் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிக்க விஷால் சம்மதித்திருப்பதாகவும் கூறி 3 தவணையாக 47 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். ஆனால், சொன்னபடி வடியுடையான் படமும் எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை” என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

காவல் துரையின் விசாரணையில், இயக்குனர் வடிவுடையான் பணம் வாங்கி ஏமாற்றியது உறுதியானது இதையடுத்து, அவரை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

What do you think?

‘பள்ளி சுவரின் மீது ஏறி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்’

இன்று முதல் தொடங்குகிறது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு!