3 மணி நேரத்தில் கைது..!! அமைச்சர் கோவி செழியன் உறுதி…!!
அண்ணா பொறியியல் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி மாணவியிடம் 2 மர்ம நபர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அதிலும் ஒருவர் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..