கரூர்- தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பேரணி
கரூரில் தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து, தமிழ் ஆட்சி மொழி வார விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தமிழ் விழிப்புணர்வு குறித்த முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.