டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்..!! அமலாக்கத்துறையின் அடுத்த ஸ்டெப்..?
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இதில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராத நிலையில், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார். அதில், விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதுவும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும், தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..