அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்காத்துறை அனுப்பிய ஷாக்..!!
டெல்லியில் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
8 முறை சம்மன் அனுப்பியும், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகாமல் மறுத்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..