February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா

கெஜ்ரிவால் 16-ஆம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளிலும், பா.ஜ.க 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

முதலமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களையும் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், சட்டபேரவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதனிடையே, வரும் 16 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

Related posts

சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..!

Digital Team

அதிநவீன கேமராவுடன் மருத்துவமனையில் நுழைந்த நபர் – நர்சுகள் அலறியடித்து ஓட்டம்..!

Digital Team

“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி

Digital Team

டிரம்ப் வருகை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்…!

superadmin

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ரஜினி நேரில் ஆஜராக ஒரு நபர் ஆணையம் சம்மன்!

Digital Team

உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தலைவர்கள் கண்டனம்

superadmin
You cannot copy content of this page
Madhimugam