இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்!

டெல்லியில் இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 தொகுதிகளையும் வென்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து டெல்லியின் முதலமைச்சராக ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை பதவியேற்க உள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது.

பிரதமர் மோடிக்கு மட்டும் இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து இன்றைய விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

அனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்

சென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு? – முதலமைச்சர் ஆலோசனை