டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர்!

தந்தையின் கனவை நனவாக்கி, இந்திய குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ்குமாரின் தந்தை ஒரு மாதத்திற்கு முன்பு காலமானார். இந்நிலையில், ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் காலிறுதியில் மைக்கேல் முஸ்கிட்டாவை வீழ்த்திய ஆஷிஷ் குமார் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவருக்கு இதுவே முதல் ஒலிம்பிக் போட்டியாகும். 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்று குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

What do you think?

‘மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வருமா?’ விஜய் ரசிகர்கள் அப்செட்!

‘நிர்பயா வழக்கு’ குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு, இன்று ஒத்திகை!