ரயில் நிலையங்களில் கிடைக்கும் பிரபலமான உணவு பொருட்கள்..!
நாட்டில் உள்ள சில ரயில் நிலையங்களில் தான் அங்குள்ள பிரபல உணவுகள் கிடைக்கிறது. அப்படி எந்தெந்த ரயில் நிலையங்களில் என்ன கிடைக்கிறது என்று பார்க்கலாம்…
-
ராஜஸ்தான் (அஜ்மீர் ரயில் நிலையம்) – காடி கச்சூரி, இது கோதுமை மாவை பயன்படுத்தி பூரி போல செய்யப்படுகிறது.
-
அசாம் (கவுகாத்தி ரயில் நிலையம்) – அங்கு பிரபலமான ரெட் டீ கிடைக்கும்.
-
மேற்கு வங்கம் ( ஹவுரா ரயில் நிலையம்) – சிக்கன் கட்லெட், இதை பலரும் ஆர்வமாக வாங்கி சாப்பிடுவார்கள்.
-
உத்திரபிரதேசம் (சார்பார்க் ரயில் நிலையம்) – லக்னோ பிரியாணி கிடைக்கும்.
-
மத்தியபிரதேசம் ( ரத்லம் ரயில் நிலையம்) – போஹா, இது அவல். எலுமிச்சை மற்றும் வேர்கடலை வைத்து தயாரிக்கப்படுகிறது.
-
உத்திரபிரதேசம் (துண்டலா ரயில் நிலையம்) – ஆலு டிக்கி, இது உருளைகிழங்கு மற்றும் பட்டாணியால் தயாரிக்கப்படுகிறது.
-
மும்பை (கர்ஜத் ரயில் நிலையம்) – பாரா பாவ் மிகவும் பிரபலம்.
-
தமிழ்நாடு (திருநெல்வேலி ரயில் நிலையம்) – இங்கு அல்வா விற்பனையாகும்.
-
தமிழ்நாடு (கோவில்பட்டி ரயில் நிலையம்) – ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கிடைக்கும்.
-
தமிழ்நாடு (மணப்பாறை ரயில் நிலையம்) – மணப்பாறை முறுக்கு ரயில் நிலையத்தில் கிடைக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
