பாஜக நிர்வாகி படுகொலை..! கொலைக்கான காரணம்..? பரபரப்பான சிவகங்கை..!
சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் “செல்வக்குமார்”.. இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தின் செயலாளராகவும் பாஜக கூட்டுறவு பிரிவில் நிர்வாகி பொறுப்பிலும் இருந்துள்ளார்.
பாஜக நிர்வாகி கொலை :
இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும்., ஆம்புலனஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.. தகவலின் பேரில் உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செல்வக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின் செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி டேங்கரே பிரவீன் உமேஷ், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
3 பிரமுகர்கள் கொலை :
மூன்று நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்ற சம்பவம் சிவகங்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் வெவ்வேறு இடங்களில் 3 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
கடலூர் திருப்பனம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் பத்மநாதன், திருவட்டாறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன், சிவகங்கையில் பாஜக நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழத்தை அதிர வைத்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..