பெரும் எதிரிபார்ப்பிற்கு மத்தியில் இன்று இமாச்சல பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 68 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் இன்று காலை தொடங்கியது.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆர்வமுடன் செய்து வருகின்றனர் அனைத்து வாக்கு சாவடைகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மீ என்று மும்முனை போட்டியாக இந்த தேர்தல் நடைபெறுகிறது.
68 சட்டமன்ற இடங்களுக்கு 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிக்க 7881 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு 52 லட்சத்து 92 ஆயிரத்து 828 பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும் இந்த தேர்தலில் 24 பெண் வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர். குஜராத் மாநிலத்தின் தேர்தல் நிறைவடைந்த பிறகு இரு மாநிலங்களின் வாக்குகளும் சுரத்து எண்ணப்பட்டு அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.