குறைந்தது தங்கம் விலை..!! நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!!
ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்ததால்.., நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். அதை அதிர்ச்சியூட்டும் விதமாக நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து,
நேற்று 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 44,800 ரூபாயும், 18 காரட் ஆபரணதங்கம் 36,696 ஆகவும் விற்கப்பட்டது.
ஆனால் இன்று திருப்பம் தரும் விதமாக 22 காரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூபாய் 44,720 ரூபாயாகவும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,590 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 36,632 ஆகவும். கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 4,579 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, கிராமுக்கு 79.80 ரூபாய் ஆகவும். ஒரு கிலோ வெள்ளியின் விலை 79,800 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.