ADVERTISEMENT
“”சிறுதானிய உணவு திருவிழா-திருப்பத்தூர்””
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் , சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023யை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல்வேறு வகையான சிறுதானியங்கள் கொண்டு உணவுகள் தயாரித்து பார்வைக்கு வைத்தனர்.
இதில் கேழ்வரகு, சாமை, தினை, சோளம் கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் பருப்புவகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 100 க்கும் மேற்பட்ட வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்ததை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.