திருவண்ணாமலையில் வழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதால் அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரை தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கி படுகாயம் அடைந்தார். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்து, செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்றுள்ளது. அப்பொழுது இறையூர் பகுதியில் நிறுத்தி இரண்டு பயணிகளை ஏற்றி சென்றதாக, பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்தை விரட்டி முந்திச்சென்று வழி மறித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் பேருந்தில் இருந்த ஓட்டுனரை, தனியார் பேருந்து ஊழியர்கள் கீழே இழுத்து சரமாரியாக தாக்கியள்ளனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் ரத்தம் சொட்டசொட்ட அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனியார் பேருந்து ஊழியர்களின் அட்டூழியத்தை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்தனர். இச்சம்பவம்இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.