சென்னையை வீழ்த்தி 3-வது முறையாக ஐஎஸ்எல் தொடரின் கோப்பையை வென்ற கொல்கத்தா!

ஐஎஸ்எல் தொடரின் 6வது சீசனில் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஐபிஎல் தொடர் போல கால்பந்திற்கு ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு ஐஎஸ்எல் தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றது. இதில் கோவாவின் படோர்டா மைதானத்தில் வைத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் தலா இரு முறை சாம்பியன்களான சென்னையின் எப்சி, அத்லெட்டிக்கோ கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் 4வது நிமிடத்திலே சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடிக்கும் எளிய வாய்ப்பை தவற விட்டார். அதன்பின்பு சுதாரித்து கொண்ட கொல்கத்தா அணி வீரர்கள் மூன்று கோல்களை அடித்தனர். பதிலுக்கு சென்னை அணியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐஎஸ்எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

What do you think?

‘தோண்டப்படும் குழிகள், பலி எண்ணிக்கையை மறைக்கிறதா அரசு?’ வைரலாகும் சாட்டிலைட் புகைப்படங்கள்!

‘விலையை குறைக்க சொன்னா உயர்த்தியுள்ளார்’ மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு!