விஜய் இல்லை அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்!

இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவாகி இருப்பவர் இளம் இயக்குனர் அட்லீ. ராஜா, ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ அடுத்ததாக தெறி, மெர்சல் மற்றும் பிகில் என
தொடர்ச்சியாக விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

விஜய்யின் 65வது படத்தையும் அட்லீ தான் இயக்கப்போகிறார் என்று பேச்சு அடிபட்ட நிலையில் தற்போது அது உண்மையில்லை என்றும் அட்லீ அடுத்தாக ஷாருக்கானை வைத்து தான் தன்னுடைய 5வது படத்தை இயக்கப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டியின் போது ஷாரூக்கானும், அட்லீயுமா அருகருகே அமர்ந்திருந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

shahrukh khan and atleeக்கான பட முடிவுகள்
Shah Rukh Khan And Atlee

மேலும் ஒரு ஆண்டுக்கு முன்பே ஷாரூக்கானிடம் கதையை கூறி சம்மதம் வாங்கிய அட்லீ இத்தனை நாட்கள் திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததாகவும் தற்போது அது எல்லாம் முடிந்துவிட்டதால் கூடிய விரைவில் அட்லீ, ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

What do you think?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்வு

‘ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குனர் பா.ரஞ்சித்’