பழனி பாஜக பிரமுகர் செய்த கொடூர செயல்..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இயங்கி வரும் அரசு பள்ளியில், சத்துணவு பெண் ஊழியர் ஒருவர் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய முன் தினம் அந்த பெண் வந்து கொண்டிருந்த சாலையில் புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் அந்த பெண்ணை வழிமறித்து சமையல் கணக்கு வழக்கை பார்க்க வேண்டும் என சொல்லி அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.
இவர்களின் சூழ்ச்சி அறியாத அந்த பெண், அவர்களுடன் சென்று கணக்கு வழக்குகளை காண்பித்து கொண்டிருந்த போது.., பாலியல் வார்த்தைகளில் பேசியுள்ளனர். அதனை உணர்ந்த அந்த பெண் வெளியே சென்ற முயன்ற போது.., அந்த பெண்ணை தாக்கி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். அதன் பெண் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். பின் உறவினர்கள் உதவியுடன் இந்த சம்பவம் குறித்து சாமிநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் வழக்கு பதிவு திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய முற்பட்ட போது லஞ்சம் கொடுத்துள்ளார்.., ஆனால் காவல் துறையினர் அதனை மறுத்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் தப்பி சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து மகுடிஸ்வரனை தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர். அதன் பின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆங்காங்கே பாஜக பிரமுகர்கள் சிக்கி கொள்ளுவது பாஜகவினரிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..