இனி வாக்களர் அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்கனும்!

கள்ள ஓட்டுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயரை நீக்கவும், கள்ள ஓட்டுகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. 32 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர், கடந்த ஆண்டு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து ஆதார் எண்ணை சேகரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய சட்ட அமைச்சக அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதனையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தற்போது தீவிரம் காட்டியுள்ளது.

What do you think?

மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

தடையை மீறி போராட்டம்; 15,000 இஸ்லாமியர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு