பிறப்பு சான்றிதழ் வைத்திருப்போர் கவனத்திற்கு..!! இனி இது இருந்தா மட்டும் தான் சான்றிதழ் செல்லுமா..?
பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் உரிமை மேலும் பிறப்பு சான்றிதழ் ஒரு குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சியாக பார்க்ப்படுகிறது. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு மற்றும் சட்டம் வழிவகை செய்கிறது.
பிறப்பு சான்றிதல் வாங்க புதிய கட்டுப்பாடு :
மத்திய அரசு சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக அறிவித்திருந்து. இந்த நிலையில் பிறப்பு சான்றிதழ்களை வாங்குவதற்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஜனவரி 1, 2000க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் 2000க்கு பின் பிறந்து 15 வருடமாக பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்களுக்கும் இந்த வருடம் டிசம்பர் 31 வரை அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்பு சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம், என மத்திய அரசு கூறியுள்ளது.
கிராம பஞ்சாயத்தில் பதிவிட்ட சான்றிதல் :
கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..? அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன் லோடு செய்ய முடியும்.
இதற்காக தமிழ்நாடு அரசு கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..? என்று இங்கே பார்க்கலாம்.
அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன்லோடு செய்வதற்காக தமிழக அரசு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுப்பார்கள்.
அது மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள். இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும். பின்னர் பாலினம், வயது, ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் .
இதில் பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இந்த பிறப்பு சான்றிதழை கிளிக் செய்து உடனே டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
பிறப்பு சான்றிதலில் முக்கியதுவம் :
நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழ் கருதப்படகிறது.. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வந்தது. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல், அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
ஆதார் கார்ட்டை போல பிறப்பு சான்றிதல் :
பிறப்பு பதிவு சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த, மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வ ருகிறது.
இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்யளாம்.ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும். ஆனாலும் பல இடங்களில் ஆதார் கேட்கப்படுவதால் இந்த அட்டை எந்த அளவிற்கு உதவும் என்று தெரியவில்லை.
– பவானி கார்த்திக்