நாய் வளர்ப்போர் கவனத்திற்கு..! இந்த தடுப்பூசி கட்டாயம்..! மாநகராட்சி அதிரடி..!
நாய்களை ஆசையாக கொஞ்சிய காலமெல்லாம் தற்போது மாறி நாயை கண்டாலே தெரித்து ஒடும் நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு நாய்கள் தொல்லை கொடுத்து வருகிறது.
இரவு நேரங்களில் பைக்கில் சென்றால் தெரு நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்க வருகிறது.அப்படி துரத்தியதால் சிலர் கிழே விழுந்து காயம் ஏற்படுகிறது.
ஒரு சிலர் இறந்தே விடுகின்றனர்.தெரு நாய்கள் அப்படி என்றால் வளர்ப்பு நாய்கள் அதைவிட மோசம்.சமிபத்தில் கூட வளர்ப்பு நாய் ஒன்று 5வயது சிறுமியை கடித்து குதறியது.
இதை தடுப்பதற்கான முயற்ச்சியில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதற்காக மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நாய் பிடிப்பவர்கள் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2 வண்டிகளில் நாய்கள் பிடிக்கப்பட்டன. இதில் பிடிப்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், அதை வளர்ப்பதற்கான அனுமதியை பெறுவதற்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால் நாய் வளர்ப்பவர்கள் இத்தடுப்புசி போடுவதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் முதல் இதுவரை நாய் வளர்ப்பதற்காக 4,345 உரிமங்களை சென்னை மாநகராட்சி ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. மேலும் 2,196 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் 9,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
-பவானிகார்த்திக்