நீளமாக முடி வளர்க்க நினைக்கும்.., ஆண்கள் கவனத்திற்கு..!!
பெண்களை போலவே அழகான மென்மையான கூந்தல் வளர்க்க வேண்டும் என்ற ஆசை பல ஆண்களுக்கு இருக்கும். சிலருக்கு வித விதமாக ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்கும். இதை சரி செய்ய வழி தெரியாமல் பலரும் தவிப்பதுண்டு.
இப்படி ஏற்படுவதற்கான காரணம் தவறான உணவு பழக்க வழக்கம் தான், அதை சரி செய்வது மிக சுலபம், கீழே உள்ள சில குறிப்புகளை பின் தொடருந்தாலே முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீளமான முடியை வளரச்செய்ய முடியும்.
* இரு சக்கர வாகனத்தில் வெயிலில் பயணம் செய்யும் பொழுது, வியர்வை, மாசு காரணமாக முடி உதிர தொடங்குகிறது. தலை கவசம் உயிர் கவசமாக இருக்கலாம். ஆனால் அவற்றை தலையில் அணிந்து செல்லும் முன் முடிக்கும் ஏதாவது உறை அணிய வேண்டும்.
* வெயிலில் வெளியே சென்ற சத்தான பழங்கள், பழத்தால் தயார் செய்யப்பட்ட ஜூஸ் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும். ரசாயனம் இல்லாத ஷாம்பூக்களை பயன் படுத்த வேண்டும்.
* தலை முடிவாரும் பொழுது உங்களுக்கென்று தனி சீப்பை பயன் படுத்த வேண்டும்.
* ஹேர் டை பயன் படுத்தும் போது அமோனியா இல்லாத ஹேர் டை பயன் படுத்த வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறை எலும்பிச்சை பழம் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும்.
இதை பின் பற்றினாளே கூந்தல் உதிர்வை குறைத்து, அடர்த்தியான முடியை வளர்த்துக் கொள்ள முடியும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி