பெற்றோர்கள் கவனத்திற்கு..! உங்கள் குழந்தை விளையாடாமல் இருந்தால் ஏற்படும் விளைவு..!!
குழந்தை என்றாலே சூட்டி தனம்.., குறும்பு தனம் என நிறைய சொல்லலாம். குழந்தைகள் பொதுவாகவே அறிவு திறனும், விளையாட்டு திறனும் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஒரு சில குழந்தைகள் மட்டும் தான் குறும்பு தனம் எதுவும் இல்லாமல் சோர்ந்தே இருப்பார்கள்.
முக்கியமாக 11 வயதில் இருந்து 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அவர்கள் எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் சோர்வாக இருகிறார்கள் என்றால், அது அவர்களின் மனதை அதிகம் பாதிப்படைய செய்யும்.
அப்படி சோர்வாக இருப்பதால் பசி ஏற்படாது, இரவில் சரியாக தூக்கம் வராது, எனவே ஒரு மணி நேரமாவது அவர்களை விளையாட செய்ய வேண்டும்.
* ஒரு மணி நேரம் விளையாடுவதால் கவனச் சிதறல் மற்றும் மன பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
* சிறு வயதில் என்றும் சுறுசுறுப்பாக, துடிப்புடன் இருக்கும் குழந்தைக்கு இதயம் சம்மந்தமான நோய்கள் வராது.
* அதிக நேரம் மொபைல் கேமில் நேரம் செலவிடுவதை விட.., உடலுக்கும், மூளைக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாட செய்யலாம்.
அதாவது கிரிக்கெட், கேரம், செஸ் மற்றும் கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி