கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு ; பனிக்குட நீர் அதிகரிக்க..!!
குழந்தையை கருவில் சுமக்க தொடங்கியதும் கர்ப்பிணி பெண்களுக்கு.., கருவில் உள்ள சிசு, பராமரிப்பு பற்றி பல கேள்விகள் இருக்கும். அதிலும் முக்கியமான ஒன்று “பனிக்குடம்”.
குழந்தையை மிதக்க செய்யும் பனிக்குடம் ஆனது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க உதுவுகிறது. இந்த பனிக்குட நீரில் தான் குழந்தை நீந்தவும், சுவாசிக்கவும் கற்றுக்கொள் கிறது. சில சமயம் குழந்தைகள் பனிக்குட நீரை குடித்துவிடும், அது மருத்துவரிடம் ஸ்கேன் செய்யும் பொழுது தெரிந்துவிடும்.
அப்படி குழந்தைகளை பராமரிக்கும் பனிக்குடம் நீர் அதிகரிக்க தேவையான சில உணவுவகைகள் பற்றி பார்க்கலாம்.
பனிக்குட நீர் அதிகரிக்க தேவையான நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மாதுளை பழம், ஆரஞ்சு பழம், திராட்சைப் பழம் மற்றும் தர்பூசணி, டிராகன் ஃப்ரூட் இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலின் நீரேற்றத்தை அதிகரிக்க செய்கிறது.
தர்பூசணியில் 91.5% நீர்ச்சத்தும், டிராகன் ஃப்ரூட்டில் 91.4% நீர்ச்சத்தும், ஸ்ட்ராபெரி பழத்தில் 91.0% நீர்ச்சத்தும் மற்றும் திராட்சை பழத்தில் 90.5% நீர்ச்சத்தும் இருக்கிறது.
இந்த பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம். இரவு நேரத்தில் நடைபயிற்ச்சி மேற்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி