தணிக்கை ஆய்வாளர் பணியிடங்கள்..! 780 பேருக்கு பணி நியமன ஆணை..!
தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 780 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆய்வாளர் மற்றும் உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 780 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..