மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மன உறுதி அதிகரிக்கும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். உங்களது நீண்ட நாள் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள், பணியில் உயர்வு பெறுவீர்கள். காதல், கல்யாணம் விஷயத்தில் நீங்கள் நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சுறுசுறுப்பாக உணர்வீர்கள். பணி செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாள் நினைத்தது இன்று கைக்கூடும் அர்புதமான நாளாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நன்மை தரக்கூடிய நாளாக தான் அமையப் போகின்றது. ஆனால் வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து சென்றால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்த நல்ல மாற்றங்கள் நடக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனசு கொஞ்சம் குழப்ப நிலையில் இருக்கும். எதையோ இழந்தது போல கவலையாக தான் இருப்பீர்கள். எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். குலதெய்வத்தை நினைத்து விட்டு அன்றாட வேலையை தொடங்கினால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். முக்கியமான வேலையை நாளை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனநிறைவான நாள். நீங்கள் நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்கும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போடக்கூடிய நேரம் வந்துவிட்டது. புதுசாக பொன் பொருள் வண்டி வாகனம் வாங்குவதாக இருந்தால் இன்றைக்கு வாங்கலாம். வீட்டிற்கு தெரிவித்த தேவையான சின்ன சின்ன பொருட்களை வாங்கவும் இது சிறந்த நாள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு ஏற்படும். சொந்த தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பாட்னரை நம்பி கணக்கு வழக்கை கண்மூடித்தனமாக ஒப்படைக்க வேண்டாம். எதிலும் கவனம் இருந்தால் அது நமக்கு நன்மையை கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலும் பிரச்சனையில் இழுத்து விட நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். உஷாராக இருந்து கொள்ளுங்கள். ரொம்பவும் நெருங்கிய நண்பர்களே உங்களுக்கு எதிரியாக கூட மாறலாம். ஜாக்கிரதை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் கஷ்டம் வரக்கூடிய நாளாக தான் இருக்கப் போகின்றது. பயந்துடாதீங்க, புதுசாக எதையும் தொடங்க வேண்டாம். எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். ஆழ்ந்த சிந்தனையில் இறங்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அமோகமான வெற்றிகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து, நடக்காத நல்ல விஷயங்கள் என்று நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நன்மை மிகுந்த நாளாக இருக்கும் . ஆனால் நீங்கள் கொஞ்சம் பிடிவாத குணத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முன் கோபப்படக்கூடாது. அடுத்தவர்களை எடுத்துறிந்து பேசக்கூடாது. உறவுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் முரண்டு பிடித்தால் பிரச்சனை உங்களுக்கு தான்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பொறுமையோடு செயல்பட வேண்டும். பிரச்சனைக்குரிய நாளாக இருப்பதால் பேச்சை விட வேண்டாம். மற்றவர்களின் பிரச்சனையில் தங்களது மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் செய்யக்கூடிய வெலைகள் அனைத்திலும் இழுபறி உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு முடிவு எடுப்பதில் குழப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு முன் கோபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பேசும்போது கவனித்து பேசவும். எதை செய்தாலும் நன்கு சிந்தித்து செய்வது நல்லது.