‘இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா’ மகளிர் தினத்தில் மகுடம் சூடிய ஆஸி., மகளிர் அணி!

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி தொடக்க வீராங்கனைகள் ஹெய்லி (75) மற்றும் மூனி (78 ) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

அடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்க முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி 5வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

What do you think?

பெண்களுக்கான சமத்துவத்தை பெறுகின்ற நிலையை உருவாக்க வேண்டும் – வைகோ

சச்சின் புகழ்ந்த 5 பெண்கள் – மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ