ஆட்டோ ரேஸ்ஸால் இரண்டு பேர் பலி… 3 பேர் காயம்.. வெளியான சிசிடிவி காட்சி..!
திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 இருசக்கரவாகனங்கள் மோதி 2 பேர் உயிர் இழப்பு ,3 பேர் படுகாயம் என தகவல் வெளியானது.
இந்த விபத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த மணி , அம்பத்தூரை சேர்ந்த மோகனகிருஷ்ணன்30, மாரிமுத்து32, ஜெபேயர்20 ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர்.
இது குறித்த விசாரித்த போலிசார் இந்த விபத்திற்கு ஆட்டோ ரேஸ் காரணம் என தெரியவந்துள்ளது. வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றம் அருகே அருமந்தையில் 8 க்கும் மேற்பட்ட ஆட்டோகள் ரேஸில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ரேஸ் முடியும் இடமான செங்குன்றம் அருகே வந்த போது ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாதுகாப்பு மற்றும் வேடிக்கை பார்க்க வந்த இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் உயிர் இழந்துள்ளனர்.
ஆட்டோ ரேஸ் குறித்து சிசிடிவி காட்சி வெளியான நிலையில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ ரேஸ் குறித்து வெளியான வீடியோவில் 8 ஆட்டோக்கள் சாலையில் சீறிபாய்வதும் அதற்கு பாதுகாப்பாக 20க்கு மேற்பட்ட இருசக்கரவாகனம் மற்றும் 2 கார்கள் செல்வதும் பதிவாகியுள்ளது.
-பவானி கார்த்திக்