“ஆவணி பௌர்ணமி விரதம்” அருள் தரும் அம்பிகை..! இதை செய்ய மறக்காதீங்க..!!
இன்று ஆவணி மாதம் 2ம் நாள்., இந்த நாளில் ஆவணி மாதம் 2ம் நாள் மட்டுமின்றி ஆவணி பௌர்ணமி மட்டும் ஆவணி அவிட்டம் என இரண்டு சிறப்புகள் உண்டு.. இந்த ஆவணி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும்… ஆவணி மாதம் பௌர்ணமியில் விரதம் இருந்து அம்பிகை அம்மனை வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
குறிப்பாக ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள் அதிகம் உண்டு.. குறிப்பாக ஆவணி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் மிகவும் விஷேசமான நாள்.
அதிலும் ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்து அம்பிகை அம்மனக்கு தீபம் ஏற்றி.. வழிபட்டால் வீட்டில் தீராத கடன்கள் தீர்ந்து விடும் மற்றும் பண வரவு அதிகரிக்கும்.
இந்த வழிபாட்டை ஆவணி பௌர்ணமி நாளில் மட்டுமின்றி.., ஒவ்வொரு கிழமையிலும் வரும் பௌர்ணமி நாளில் அம்பிகை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்.. சிறந்த பலன்கள் கிடைக்கும். மற்றும் அம்பிகையின் அருளும் கிடைக்கும்..
இன்று மாலை 6:30 மணிக்கு மேல் அம்பிகை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி.., பிரசாதம் படைத்து.. மனமுருகி அம்மனை வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி, பணவரவு அதிகரித்து வீட்டில் செல்வம் செழிக்கும்.
அடுத்த படியாக ஆவணி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, ஆபரணங்களை அணிவித்து பூஜை செய்யலாம்…
அணிய வேண்டிய வண்ண உடைகள் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, நான்கு நிறங்களில் ஏதேனும் ஒரு நிறத்தில் உடையை அம்மனுக்கு சாத்த வேண்டும்.., கஸ்தூரி மலர் அல்லது சிகப்பு பூ கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
மேலும் நாட்டு சர்க்கரையால் அபிஷேகம் செய்து, முக்கனிகள், கற்கண்டு, பொங்கல் மற்றும் நெய் சாதம் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.
பின் தீப ஆராதனை காண்பித்து பூஜை அறையில் அமர்ந்து மனதில் உள்ள கவலைகளை மறந்து… அம்பிகையின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்..
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிஸம் மயா
தாஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வரி
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேஸ்வரி
யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்து மே
இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமது கஷ்டங்கள் நீங்கி விடும் என்பது ஐதீக உண்மை…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..