அவிநாசி அருகே கோர விபத்து – 20 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவிநாசி அருகே சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தும், கேராளவிலிருந்து சேலம் வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (பிப்-20) அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த பேருந்தில் மேலும், பலர் படுகாயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், கோவை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநரில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து கேரள அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து மீட்புக்குழு ஒன்று அவிநாசி வந்துகொண்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்த பின்னரே உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து தடைபட்டது.

What do you think?

2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி – கமல் வேதனை