மறந்துகூட இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க..!
இரவில் உணவு சாப்பிட்டு உறங்கியதும், ஒரு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு காலை உணவை சாப்பிடுகிறோம். அப்போ வயிறு காலியாக இருக்கும் சமையத்தில் காலையில் நாம் உண்ணும் உணவு நல்ல ஊட்டச்சத்து மிக்கதாக இருந்தால் அது உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.
அப்படி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளை இப்போது பார்க்கலாம்.
சிட்ரஸ் ஃபுரூட்ஸ்: கிரேப்ஸ், ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடும்போது அதிலிருக்கும் சிட்ரஸ் ஆசிட் வயிற்றில் எரிச்சல் மற்றும் ஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
பொரித்த உணவுகள்: எண்ணெயில் பொரித்த வடை, பூரி போன்ற உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதில் இருக்கும் கொழுப்பு எளிதில் ஜீரணமாகாது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: வெறும் வயிற்றில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது அது திடீர் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் உடலில் கேடி விளைவிக்கும்.
பால் பொருட்கள்: சீஸ், பால், தயிர் ஆகிய உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிலிருக்கும் லாக்டோஸ் என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
கார்போனேடட் ட்ரிங்க்ஸ்: வெறும் வயிற்றில் கார்போனேடட் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் அதில் இருக்கும் கார்பன் வயிற்றுக்குள் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
காஃபினேட்டட் ட்ரிங்க்ஸ்: சிலவகையான பானங்களில் காஃபின் சேர்க்கப்பட்டிருக்கும், இதனை குடிக்கும்போது வாயு சம்மந்தபட்ட கோளாறுகளை உண்டாக்கும். மலச்சிக்கல் மற்றும் வாயு கோளாறுகளை உண்டாக்கும்.
ஸ்பைஸஸ்: அதிக ஸ்பைஸஸ் போட்டு தயாரித்த உணவுகள் ஜீரணமாவதை கடினமாக்கும். அதிக ஸ்பைஸஸ் குடம் மற்றும் இரைப்பை இயக்கங்களை சீர் குலைக்கும், அஜீரணத்தையும் உண்டு செய்யும்.
தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதிலிருக்கும் டேன்னிக் ஆசிட் வயிற்றில் எரிச்சலை உண்டு செய்யும்.