ஆந்திரா பெண்களுக்கான அசத்தல் திட்டம்…!! ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!!
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திரப் பிரதேச அரசு, குறிப்பாக பெண்களுக்கு “வீட்டிலிருந்து வேலை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும், பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்,.
மேலும் அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக இருப்பதாகவும், வீட்டில் இருந்தே வேலை செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் திட்டத்தை துவங்கியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..