பாபா வங்காவின் அடுத்த கணிப்பு..! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!
பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா, பல திடுக்கிடும் கணிப்புகளை தெரிவித்துள்ளார். அவரின் பல்வேறு கருத்து கணிப்புகள் பலித்துள்ளதால், அதே சமயம் அவரது கணிப்புகளை மக்கள் பெரிதும் நம்புவதும் உண்மை. புத்தாண்டு நெருங்கிறது என்றாலே பாபா வங்கா அந்த ஆண்டிற்காக கணித்திருப்பது என்ன என்ற செய்திகளும் வைரலாகிவிடும்.
பல்கேரிய ஜோதிடரான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு காலமானார். அவரது கணிப்புகள் அனைத்தும் பலருக்கும் எச்சரிக்கையாக உள்ளது. குறிப்பாக அவரது கணிப்புகளானது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்று முன்னரே கூறியிருந்தார்.
பாபா வாங்காவின் கூறியிருந்த கணிப்பானது, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும், அதனால் அவரது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்பட போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதை போலவே சமீபத்திய ட்ரம்ப்பை கொல்ல முயற்சித்து காதில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பாபா வங்கா சொன்னதை போல அவரது தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கியுள்ளது.
இந்நிலையில் பாபா வங்காவின் 2024ம் ஆண்டிற்கான அடுத்த கணிப்பின்படி ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரது மற்ற கணிப்புகளும் பலித்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு முன் இரட்டை கோபுர தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, டயானா மரணம், பிரிக்ஸிட் போன்ற அனைத்து தீர்க்க தரிசனமும் நிஜமாகியுள்ளது.
அதேநேரம் 2016ம் ஆண்டு ஐரோப்பா அழிந்துவிடும் என்பதும், 2010 மற்றும் 2014ம் ஆண்டுக்கு இடையில் ஒரு அணுசக்தி போர் போன்ற சில கணிப்புகள் பலிக்காமல் போனதால் மக்கள் சற்று நிம்மதியாகவும் இருந்தனர். அதே சமயம் அவருடைய கணிப்புகள் அதிகமாக பலித்திருப்பதால் அதனை சரிபார்க்க ஆவணங்கள் ஏதும் இல்லை என்றாலும் பாபா வங்காவின் கணிப்புகள் மீதான ஆர்வம் குறையவில்லை என்பது நிதர்சனம்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..