உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உடல் முழுவதும் முடியுடன் பிறந்துள்ளது. தற்போது இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் இருக்கும் மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அவருக்கு நேற்று முன்தினம் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் ந்த குழந்தைக்கும் 60 சத்திவேதம் முடி அதிகமாக வளர்ந்துள்ளது. அதனை கவனித்த மருத்துவர்கள் அந்த குழந்தையின் முடி நீளமாகவும் மற்றும் தடிமனாகவும் இருந்ததை கவனித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மருத்துவர் ஒருவர் பேட்டியளிக்கையில், இந்த குழந்தைக்கு giant congenital melanocytic nevus என்ற சரும பிரச்சனை பிறவிலேயே இருப்பதாகவும் ஆபத்தானது அல்ல என்றாலும், தோல் புற்றுநோய் போன்ற அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த பிரச்சனை விரைவில் அல்லது காலப்போக்கில் குணமடைந்து விடும் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.