பச்சிளம் குழந்தை பராமரிப்பு..!
குழந்தை பராமரிப்பு என்பது பெற்றோர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும், அவர்கள் வளரும் பொழுது எந்த அளவிற்கு அவர்களை பராமரிப்பு செய்கிறோமோ அதே, அளவிற்கு பிறந்தவுடனும் செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்ததும் இதை கவனிக்க மறுக்காதீர்கள்.
* குழந்தை பிறந்த பின், குழந்தையின் எடையை கணக்கிட வேண்டும். 2.5 கிலோ கட்டாயம் இருக்க வேண்டும்.
* அதிக படியாக 4 கிலோ – 4.5 கிலோ வரை இருக்கலாம்.
* குழந்தை பிறந்ததும் முதலில் அழவேண்டும். அப்பொழுது தான் நுரையீரல் சுருங்கி விரியும்.
* குழந்தை தாயின் கருவில் சூட்டில் இருந்து பழகி இருப்பார்கள், எனவே பிறந்ததும் அவர்களுக்கு குளிர தொடங்கும் எனவே, 4 முதல் 5 காட்டன் துணிக்கொண்டு அணைத்து கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறந்ததும் அவர்களை யாரும் முத்தம் இடக் கூடாது.
* குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.