கொரோனாவால் மூடப்படும் பத்மநாபபுரம் அரண்மனை !

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில் கேரள அரசு பத்மநாபபுரம் அரண்மனையை மூடுவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கேரளா மாநிலத்தில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை மூடுவதாக கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது சுற்றலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் கொரோனா எளிதாக பரவலாம் என்ற எண்ணத்தில் அம்மாநில அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

What do you think?

‘ரஜினியை முந்திய விஜய்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்

‘டெல்லியில் ஐபிஎல் போட்டிக்கு தடை’ துணை முதலமைச்சர் அறிவிப்பு!