பகீர்.. மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிக்கிய சிவராமன்..
கிருஷ்ணகிரி மாவட்டம் பருதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், போலியான முறையில் என்.சி.சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்துக் கொண்ட 13 மாணவிகளுக்கு, பாலியல் வன்கொடுமை உள்ளானார்கள்.
மேலும், 12 வயது சிறுமியும் இந்த போலி முகாமால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு புலணாய்வு குழுவை உருவாக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த குழுவானது, இன்று அந்த மாவட்டத்திற்கு சென்று, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், சம்பவ நடந்த இடத்தையும், அவர்கள் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகின.
இதற்கிடையே, சிவராமன் தன்னை வழக்கறிஞர் என்று கூறி ரூ.36 லட்சம் ஏமாற்றியதாக நேற்று எஸ்.பி அலுவலகத்தில் 7 பேர் புகார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய எல்லைகுட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
-பவானி கார்த்திக்