பக்ரீத் ஸ்பெஷல் பாதாமி மட்டன் குர்மா – இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
தியாக திருநாளான பக்ரீத் அன்று அனைவருக்கும் நினைவிற்கு வருவது “சூடான சுவையான பிரியாணி” எப்பவும் பிரியாணி செய்யுற நம்ப இந்த டைம் கொஞ்சம் வித்தியாசமா வேற ட்ரை பண்ணி பாக்கலாமா..?
பாதாமி மட்டன் குருமா. பிரியாணி கூட மட்டுமில்ல சப்பாத்தி, நான், சாதத்துகூடவும் சேர்த்து சாப்பிடலாம். அதற்கு செய்ய தேவையான பொருள்கள்.
செய்ய தேவையான பொருள்கள் :-
மட்டன் – 1 கிலோ,
நெய் – 4 ஸ்பூன்,
எண்ணெய் – 3 ஸ்பூன்,
தயிர் – 1 கப்,
மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய் தூள் – 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
சீரகத் தூள் – 1/2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்ட் பதத்திற்கு அரைத்து 4 ஸ்பூன், எடுத்துக்கொள்ள வேண்டும்.
மசாலாவிற்கு தேவையான பொருள்கள் :-
கிராம்பு – 4,
பட்டை – 1,
மிளகு – 8,
ஏலக்காய் – 4,
முந்திரி – 12,
பாதம் – 20,
பெரிய வெங்காயம் 1 பொன் நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை :-
ஒரு வானொலியில் அரைப்பதற்கு வைத்திருக்கும் அனைத்து பொருள்களையும் பச்சை வாசம் போகும் அளவிற்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் சூடு ஆரிய பின்பு மிக்ஸியில் போட்டு வெங்காயம் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
* பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்,
* நெய் உருகிய பின் மட்டன் சேர்த்து 10 நிமிடம் வேக விட வேண்டும்.
* பின் அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து அதில் தயிர், மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக விட வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மசாலாவை சுவை பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு அல்லது காரம் வேண்டும் என்றால் அதற்கு ஏற்றது போல சேர்த்துக்கொள்ளவும்.
* முடித்த பின் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி மட்டனை 1 மணி நேரம் வேக விட வேண்டும்.
* 1 மணி நேரம் கழித்து மட்டன் நன்கு வெந்ததும்.., கொத்தமல்லி சேர்த்து இறக்கி விட வேண்டும்.
இந்த சுவையான ரெசிபி டிப்ஸ் உடன்.. “இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் “பக்ரீத்” நல்வாழ்த்துக்கள்.