இளநீர் மற்றும் வழுக்கையில் எது நல்லது..?வெயிலின் சூட்டை தனிக்க கரட்டான வழி..!
வெயிலில் உடல் சூட்டை குறைப்பதில் இளநீரை விட சிறந்த பானம் வேறெதுவும் இல்லை.
அதன் நன்மைகளை அறிந்தவர்கள் தேங்காயின் விலை அதிகமானாலும் அதை வாங்கி குடிப்பார்கள்.
இளநீர் வாங்குபவர்கள் வழுக்கையின் நன்மை தெரியாத காரணத்தினால், இளநீர் மட்டும் குடித்துவிட்டு வழுக்கையை விட்டுவிடுகிறார்கள்.
வெயிலில் பரவும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
செரிமான பிரச்சனை, நெஞ்சு எரிச்சல், வயிறு மந்தம் ஆகியவற்றுக்கு தேங்காய் வழுக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வழுக்கை உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது, காரணம் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது.
வழுக்கையில் இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து, (வைட்டமின் ஈ, சி) ஆகிய சத்துக்களை உள்ளடக்கியது.
வழுக்கையை கர்பிணி பெண்கள் சாப்பிடலாம். அன்றாடம் தேங்காய் வழுக்கையை சாப்பிடுவதால், நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
இது பலம் குறைந்த உடலுக்கு பலு அளிக்கிறது.